Skip to content

சிம்ம ராசி அன்பர்களுக்கு 2026 எப்படி இருக்கும்?..

2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறக்கப் போகிறது. சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறக்கப் போகிறது. பாரபட்சமில்லாமல் ஒளியைத் தரக்கூடியவர் சூரிய பகவான் என்பதால் எல்லாருக்குமே நல்ல ஆண்டாக இருக்கும். கஷ்டங்கள் தீரும். சொந்த தொழில் தொடங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். நாடெங்கும் பாதுகாப்பு உணர்வு அதிகமாகிக் கொண்டே போகும். மக்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மருத்துவத் துறை அற்புதமாக வளரும்.

திருக்கணிதத்தின்படி சனி ஏற்கனவே மீனம் வீட்டில் இருக்கிறார். இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி, டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி ஆகிய 2 பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குரு இந்த வருடம் உச்சமடைந்து கடகத்துக்கு வருகிறார். மீண்டும் அதே குரு அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்கு அதிசாரத்தில் போகிறார். அந்த வகையில், இந்தப் புத்தாண்டில் சிம்மம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

சிம்மம்

சிம்மம ராசிக்கு மோசமான காலகட்டமாக இந்த காலகட்டம் இருக்கும். ராசியிலேயே ஜென்ம கேது, ராசிக்கு 7 ஆம் இடத்தில் ராகு, 8 ஆம் இடத்தில் சனி பகவான் இருக்கிறார். ராசிக்கு 11 ஆம் இடத்தில் லாப ஸ்தானத்தில் இருக்கும் குரு மே மாதத்திற்குப் பிறகு 12 ஆம் இடத்திற்கு வருகிறார். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலமாக நிறைய ஆதாயங்கள் கிடைக்கும்.

திருமண யோகம்

லக்கினத்திற்கு 7 ஆம் இடத்தில் ராகு இருப்பதால் கலப்புத் திருமணம் நடக்கும். காதலிப்பவர்கள் வேற்று மதத்தினரை திருமணம் செய்யும் யோகம் ஏற்படும். ஓராண்டுகள் பொறுமையாக இருந்தால் வீட்டில் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்யும் வாய்ப்புள்ளது. வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு அற்புதமான காலகட்டம். பிஆர், சிட்டிசன்ஷிப் கிடைக்கும் யோகம் உண்டு.

வீட்டில் சுப விரயம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அதிகளவிலான வெளியூர் பயணங்கள் ஏற்படும். கோர்ட், வழக்குகளில் வெற்றிகள் கிடைக்கும். குலதெய்வ கோயிலுக்கு அதிகம் செல்வீர்கள். 8 ஆம் இடத்தில் சனி இருப்பதால் கெட்ட சகவாசங்கள், திருமணம் தாண்டிய உறவு, கெட்ட பழக்கவழக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை.

காதல் முறிவு

காதல் முறிவு, திருமணம் தாண்டிய உறவுகளில் இருந்தால் அவை முறிவதற்கான வாய்ப்பு, அதன் மூலம் மிகுந்த மன உளைச்சலாகக் கூடிய வாய்ப்புள்ளது. 8 ஆம் இடத்தில் சனி பகவான் இருந்து 7 அல்லது 6 ஆம் இடத்தில் சர்ப்ப கிரகங்கள் இருப்பதால் வாகன விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஹெல்மெட்டை மறக்காமல் போட்டுக் கொள்வது நன்மை பயக்கும்.

அபராதம்

அரசுக்கு அபராதம் செலுத்தும் சூழல் ஏற்படும். கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள், சண்டைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. ஆவணம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. உறவுக்காரர்கள், நண்பர்கள் மத்தியில் அவமானம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. தொழிலில் போட்டி, பொறாமை ஏற்படும். எதிரிகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

வருத்தம் வரும்

மருத்துவச் செலவுகள் அதிகளவில் வரும் என்பதால் மெடிக்கல் இன்சூரன்ஸ் போட்டுக் கொள்வது நல்லது. பெண் குழந்தைகள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு வருத்தத்தை தரும். மாமனார், மாமியாருடன் கருத்து வேறுபாடும் வாய்ப்புள்ளது எனவே கவனமாக இருக்கவும்.

error: Content is protected !!