Skip to content

பூச்சி மருந்து சாப்பிட்டு தனியார் நிறுவன ஊழியர் சாவு- திருச்சி க்ரைம்

பூச்சி மருந்து சாப்பிட்டு தனியார் நிறுவன ஊழியர் சாவு

திருச்சி வரகனேரி வடக்கு பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரராஜன் (55)., தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார் இதனால் தன் வீட்டில் பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார் அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுந்தரராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

கஞ்சா விற்ற நபர் கைது

திருச்சி தில்லை நகர் வாமடம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக தில்லைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சோதனை செய்தனர். அப்போது கஞ்சா விற்ற மண்ணச்சநல்லூர், நொட்சியம் குமார குடியைச் சேர்ந்த கரிகாலன் ( 53 ) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமினில் விடுவித்தனர் அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

error: Content is protected !!