Skip to content

​தமிழக தேர்தல் களம்: வெற்றி தொகுதிகளை குறிவைக்கும் அமித்ஷா – திருச்சியில் பாஜக மாநில நிர்வாகிகளுடன் சந்திப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்தத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையவுள்ள சூழலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று திருச்சிக்கு வருகை தருகிறார். இன்று இரவு திருச்சியில் நடைபெறும் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மையக்குழு உறுப்பினர்களுடன் அமித்ஷா கலந்துரையாடுகிறார். இந்த கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் குறித்தான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

ஆலோசனையின் முக்கிய அம்சங்கள்:வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்: தமிழகத்தில் பாஜக நேரடியாகப் போட்டியிட்டு வெற்றி பெறக்கூடிய தொகுதிகள் எவை என்பது குறித்து மாநில நிர்வாகிகளிடம் அமித்ஷா கேட்டறிகிறார்.

பூத் கமிட்டி பணிகள்: தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் பூத் கமிட்டிகளின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட உள்ளது.

திமுக எதிர்ப்புப் பிரச்சாரம்: திமுக அரசின் குறைகளை மக்களிடம் எப்படிக் கொண்டு செல்வது மற்றும் எந்த மாதிரியான தேர்தல் வியூகங்களை அமைப்பது என்பது குறித்து நிர்வாகிகளுக்கு அவர் ஆலோசனைகளை வழங்குகிறார். கலந்துகொள்பவர்கள்:இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில மையக்குழு நிர்வாகிகள், கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் அகில இந்திய மேலிடப் பார்வையாளர்கள் கலந்துகொள்கின்றனர். அமித்ஷாவின் இந்த வருகை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!