Skip to content

இறப்பு சான்றிதழுக்கு ரூ. 5000 லஞ்சம்-திருச்சியில் விஏஓ கைது

திருச்சி மாவட்டம், துறையூர் பச்சைப்பெருமாள்பட்டி வடக்கு கிராமத்தில் பிரபு(42) விஏஓ ஆக கடந்த 2 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். விஏஓவிடம் வைரபெருமாள்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி கந்தசாமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரது தாயார் கடந்த 07.12.2025 அன்று இறந்துவிட்டார். இது தொடர்பாக கந்தசாமி வாரிசு சான்று கேட்டு இணையத்தில் தகுந்த ஆவணங்களுடன் 24.12.2025 அன்று விண்ணப்பம் செய்துள்ளார். இது தொடர்பாக 31.12.2025 அன்று பச்சைப்பெருமாள்பட்டி வடக்கு விஏஓ பிரபுவை அவரது அலுவலகத்தில் சந்தித்த போது வாரிசு சான்று வழங்க பரிந்துரை செய்ய ரூ.6000/- கேட்டுள்ளார். கந்தசாமி கேட்டுக்கொண்டதின் பேரில் ரூ.1000 குறைத்து ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார் விஏஓ. லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத கந்தசாமி 02.01.2026 ஆம் தேதி திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இன்று 05.01.2026 ஆம் தேதி துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர்கள் .பாலமுருகன் மற்றும் குழுவினர்களுடன் இரசாயனம் தடவப்பட்ட லஞ்சப்பணம் ரூ.5000/-ஐ புகார்தாரரிடம் கொடுத்து அனுப்பினர். விஏஓ அலுவலகத்தில் விஏஓவிடம் கந்தசாமி ரூ. 5000 லஞ்ச பணத்தை கொடுத்துள்ளார். அதை பெற்று வைத்திருந்த விஏஓ கையும் களவுமாக சிக்கினார். விஏஓ-வை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!