திருச்சி காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த காங்கிரஸ் நிர்வாகியை தாக்கிய மற்றொரு நிர்வாகி மீது கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி பொன்மலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அர்ஜுன் (35).திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இவர் தில்லைநகர் வடக்கு விஸ்தரிப்பு ராமச்சந்திர நகரை சேர்ந்த ஸ்ரீ ராகவேந்திரா (43 ) .திருச்சி மாநகரில் காங்கிரஸ் கோட்ட தலைவராக உள்ளார். இவரிடம் அர்ஜுன் ரூபாய் 2 லட்சம் கடனாக பெற்றுள்ளார். ஆனால் அர்ஜுன் அந்த பணத்தை பல நாட்களாக திரும்ப தராமல் இருந்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று கோட்டை பகுதியில் நடந்த காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டத்தில் அர்ஜுன் கலந்து கொண்டார். இதில் கலந்து கொண்ட ராகவேந்திராவுக்கும், அர்ஜுனுக்கும் பணம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. அப்போது ராகவேந்திரா, அர்ஜுனை இரும்பு கம்பியால் தாக்கினாராம். இதில் காயமடைந்த அர்ஜுன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இது குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

