கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையம் பகுதியில் ஸ்டெப் ஸ்டோன் எனும் கட்டுமான நிறுவனம் முதியோர்கள் குடியிருக்கும் வகையில் 2019 ஆம் ஆண்டு நூற்றுக்கு மேற்பட்ட குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்துள்ளது இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள் தங்கள்

வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த பணத்தைக் கட்டி இறுதி காலத்தை நிம்மதியுடன் வாழ விலைக்கு வாங்கி குடியேறினர்
ஸ்டெப் ஸ்டோன் நிறுவனம் குடியிருப்பு வளாகத்தில் உள்ள நூலகம் கூட்ட அரங்கு கிளப் ஹவுஸ் மற்றும் உணவுக்கூடம் பகுதிகளை குடியிருப்பவருக்கு பாத்தியப்பட்டது என தெரிவித்து ஆனால் ஸ்டெப் ஸ்டோன் நிர்வாகம் அதன் இயக்குனர் மோத்தீஸ் குமார் பெயரில் பதிவு செய்துள்ளனர்.
கட்டுமானம் நிர்வாகம் கூறியபடி உணவு குடிநீர் மருத்துவம் பாதுகாப்பு உட்பட எவ்வித அடிப்படை வசதிகள் எதையும் மேற்கொள்ளாததால் ஸ்டெப் ஸ்டோன் நிர்வாகத்தை கண்டித்து மூத்த குடிமக்கள் அதன் வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

