உதகையிலிருந்து இன்று மதியம் தங்காடு கிராமத்தை நோக்கி 55 பயணிகளுடன் தனியார் மினி பஸ் ஒன்று சென்றது. அந்த பேருந்து கல்லக்கொரை ஹாடா பகுதியை கடந்து தங்காட்டிற்கு செல்லும் போது 32 பயணிகள் இருந்துள்ளனர். அந்த மினிபஸ் மணலாடா என்ற இடத்திற்கு அருகே சென்ற போது ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து அருகில் இருந்த 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது. மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வரும் நிலையில் ஒருவர் மட்டும் கவலைகிடமாக உள்ளதாக கூறபடுகிறது. சம்பவ இடத்தில் தீயணைப்பு துறையினர் மினி பேருந்தில் இருந்து உடைந்த பாகங்களை மீட்ட நிலையில் உதகை டிஎஸ்பி தலைமையிலான போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

