சென்னை ஆலந்தூர் ரேசன் கடையில் பொங்கல் பரிசுதொகை, தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பொங்கல் பரிசுத்தொகுப்பில் ஒரு கிலுோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஒன்று வழங்கப்பட்டது. அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ.3000 பரிசுத்தொகையுடன் பொங்கல் தொகுப்பினை வழங்கினார். ரூ. 3 ஆயிரம் ரொக்கத் தொகையை பயனாளிகள் முன்பு எண்ணி வௌிப்படையாக வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுக்கான டோக்கன் பெற்றவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் சென்று தொகுப்பை பெறலாம். அமைச்சர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். விலையில்லா, வேட்டி, சேலைகளும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

