தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர்மாவட்டம் பொன்னேரிபாடியநல்லூரில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும்,மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைகண்டறியவும் அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும்
“உங்ககனவுசொல்லுங்க “என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் /மாநகராட்சி கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் மு.அருணா தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு தன்னார்வலர்களுக்கு கணக்கெடுப்பு
பணிக்கான பொருட்களை வழங்கினார். உடன் புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில் ,
முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்
வை.முத்துராஜா, துணைமேயர் எம்.லியாகத்தலி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பா.ஜெயசுதா, திட்ட இயக்குனர் (மகளிர்திட்டம் ) ஊ.பாலசுந்தரம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர் .

