திண்டுக்கல் அருகே தம்பதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் 8 பேரை கைது செய்துள்ளனர். பழிக்குப் பழியாக கணவன் – மனைவியை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், வனப்பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் அவர்களை ஒரு மணி நேரத்தில் சுற்றிவளைத்து போலீசார் கைது செய்தனர்.

