Skip to content

மாடு மேய்த்த பெண்ணை தாக்கி 2 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

திருப்பதி மாவட்டம் பொட்டிகுண்ட்லா கிராமத்தைச் சேர்ந்த வெங்கடரத்னம்மா (56) என்பவர், தனது கிராமத்திற்கு அருகிலுள்ள மாந்தோப்பில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தனது பணப்பை இந்தப் பகுதியில் தவறி விழுந்துவிட்டதாகக் கூறி அதனைத் தேடுவது போல நடித்துள்ளார்.நகை பறிப்பு:திடீரென அந்த நபர் வெங்கடரத்னம்மாவைத் தாக்கி கீழே தள்ளிவிட்டு, அவர் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கூச்சலிட்டபடியே சங்கிலியை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அந்த நபருடன் போராடினார். இதில் சங்கிலியின் ஒரு பகுதி அவர் கையில் சிக்கியது. மீதமுள்ள சுமார் 2 பவுன் எடையுள்ள சங்கிலியுடன் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.போலீஸ் விசாரணை:காயமடைந்த வெங்கடரத்னம்மா இச்சம்பவம் குறித்து புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், பட்டப்பகலில் துணிகரமாக நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!