கோவை, சிவானந்தா காலனி, டாட்டாபாத் முதல் தெருவை சேர்ந்தவர் லோகேஸ்வரன் (வயது 28) . இவர் தொட்டி ஆட்டோவில் சென்று ஜவுளிகள் விற்கும் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் லோகேஸ்வரன் 100 அடி ரோட்டில், ராஜு நாயுடு தெருவில் தொட்டி ஆட்டோவை, நிறுத்தி விட்டு, வியாபாரம் செய்து கொண்டு இருந்தார்.
அப்போது அங்கே மோட்டார் சைக்கிளில வாலிபர் வந்தார். வியாபாரம் செய்த லோகேஸ்வரனிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.
அதற்கு அவர் பணம் தர மறுத்ததால் நான் இந்த ஏரியா ரவுடி என்றும், தன் மீது பல வழக்குகள் உள்ளது என்றும், எனவே ஒவ்வொரு மாதமும் தனக்கு மாமுல் தர வேண்டும் என்றும் கூறி மிரட்டி உள்ளார்.
தொடர்ந்து லோகேஸ்வரனின் சட்டை பாக்கெட்டில் இருந்த பணம் 2 ஆயிரத்தை பறித்து உள்ளார். இதனால் லோகேஸ்வரன் சத்தம் போட்டு உள்ளார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு அங்கு நின்ற பொதுமக்கள் திரண்டனர். உடனே அந்த வாலிபர் கத்தியை காட்டி அங்கு இருந்தவர்களை மிரட்டி விட்டு தப்பிச் சென்று விட்டார்.
இதுகுறித்து லோகேஸ்வரன் ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கத்தயை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்றது ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த லாரன்ஸ் (வயது 28) என தெரியவந்தது.
இடைத்தொடர்ந்து போலீசார் லாரன்ஸ்சை கைது செய்தனர். அவரிடம் இருந்து பணம் ரு.1000 மற்றும் கத்தி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

