Skip to content

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய கோவை கமிஷனர்

தலைக்கவசம்  அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு கோவை காவல் மாநகர் ஆணையர் டாகடர் கண்ணன் ஹெல்மெட் வழங்கி அறிவுரை வழங்கினார்.

கோவை மாநகர் பகுதியில் பொதுமக்களுக்கு தலைக்கவசம் குறிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவை லட்சுமி மில்ஸ் சந்திப்பில் கோவை மாநகர் காவல்துறை கிழக்கு போக்குவரத்து பிரிவு சார்பாக 37-வது சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோவை மாநகர் காவல் ஆணையர் டாக்டர் கண்ணன் விருந்தினராக கலந்து கொண்டார்.

பின்னர்  தலைக்கவசம் அணியாமல் வந்த 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி வழக்குப்பதிவு செய்யாமல் அறிவுரை வழங்கினர்.அதனை தொடர்ந்து கோவை

மாநகர் காவல் ஆணையர் டாக்டர் கண்ணன் 100-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில்  ஹெல்மெட் அணியாமல் வந்தனர்.

மேலும் அவர்களுக்கு  தலைக்கவசம் குறித்து நேரடியாக விழிப்புணர்வு செய்தார்.ஒரு சிலர் பின்னால் அமர்ந்து ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கும் ஹெல்மெட் வழங்கி அறிவுரை

வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துணை ஆணையர்,உதவி ஆணையர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!