அஜித் எந்த சினிமா நிகழ்ச்சிக்கும், பொதுநிகழ்ச்சிக்கும் வருவதில்லை. திரைக்கு வெளியே அவரைப் பார்ப்பது அரிது. அப்படிப்பட்டவர் பல வருடங்கள் முன்பு நெஸ்கஃபே காபி விளம்பரத்தில் நடித்தார். இதில் அவருடன் சிம்ரனும் நடித்திருந்தார். சால்ட் அண்ட் பெப்பர் போன்ற எதையும் அப்போது அவர் முயற்சி செய்திருக்கவில்லை என்பதால் ஸ்மார்ட்டாக இந்த விளம்பரத்தில் தோன்றினார். அஜித்துக்காகவே இந்த விளம்பரத்தை பார்வையாளர்கள் ரசித்தனர். ஒப்பந்தம் காலாவதியானதும் விளம்பரத்திலிருந்து அஜித் விலகிக் கொண்டார். பிறகு சூர்யாவும், ஜோதிகாவும் இந்த விளம்பரத்தில் நடித்தனர். விளம்பரத்தில் அமலா பாலுடனும், பகத் பாசிலுடனும் நடித்திருக்கிறார். தனது அம்மா ஷோபாவுடன் அவர் வரும் விளம்பரம் சென்டிமெண்டாக நான்றாகவே வொர்க் அவுட்டானது.
இந்நிலையில், தற்போது அஜித் கார் ரேஸ் குழுவுக்கு பிரபல குளிர்பான தனியார் நிறுவனம் ஸ்பான்சர் வழங்குகிறது. இதற்காக, அந்த குளிர்பானத்தை கையில் ஏந்தியவாறு உள்ள அஜித்தின் புகைப்படம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியானதால், அது வைரலாகிறது.

