மஹர சங்கராந்தியை முன்னிட்டு, தஞ்சை பெரியக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் நந்தியம் பெருமானுக்கு 2 ஆயிரம் கிலோ எடையிலான காய்கறிகள், பழங்கள், இனிப்புகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை

காண்பிக்கப்பட்டன.
தொடர்ந்து நடந்த கோபூஜையில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தனது குழந்தையுடன் பசு மாட்டிற்கு வாழை பழம் உணவாக வழங்கி பூஜை செய்து வழிப்பட்டார்.
தமிழர் திருநாளான தைப்பொங்கலின் இரண்டாம் நாளான மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, தஞ்சை பெரியக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் மஹா நந்தியம் பெருமானுக்கு மகரசங்கராந்தியை முன்னிட்டு முறுக்கு, ஜாங்கிரி, பாதுஷா, கத்தரி, வெண்டை, முருங்கை, ஆப்பிள், ஆரஞ்சு உள்பட இரண்டாயிரம் கிலோ எடையில் அனைத்து வகையான காய்கறிகள், பழங்கள், இனிப்புகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன.
தொடர்ந்து நடந்த கோ.பூஜையில். 108 பசுமாட்டிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு, புது துணி அணிவித்து, சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றன.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தனது குழந்தையுடன் பசு மாட்டிற்கு வாழைப்பழம் உணவாக கொடுத்து பூஜைகள் செய்து தீபாராதனை காட்டினார்.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தியம் பெருமானை வழிபட்டு சென்றனர்.

