கபிஸ்தலம் அருகே 10-ஆண்டுகளுக்கு மேலாக குற்ற நடவடிக்கை இல்லாத கிராமம்..
ஒரே நேரத்தில் 200-திருக்குறளை தொடர்ந்து வாசித்து, அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய அரசு நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவி. கிராமமே விழாக்கோலம்..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் அருகே கோவிந்த நாட்டுச்சேரி ஊ

ராட்சியில் குடிகாடு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 3-ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் வசித்து வருகின்றனர்..
இந்நிலையில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஓட்டப்பந்தயம், ஸ்லோசைக்கிள், செங்கல் தூக்குதல், சாக்குப்போட்டி உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக பாபநாசம் துணைக் காவல் கண்காணிப்பாளர் முருகவேலு,

கபிஸ்தலம் சரக காவல் ஆய்வாளர் மகாலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
இதில் குடிக்காடு ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் தேஜஸ்ரீ என்ற மாணவி 200-க்கும் மேற்பட்ட திருக்குறளை இடைவிடாமல் வாசித்து அனைவரது பாராட்டையும் பெற்றார். கிராமமே விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது..
மேலும் 10-ஆண்டுகளுக்கு மேலாக குற்ற நடவடிக்கை இல்லாத குடிகாடு கிராமத்திற்க்கு பட்டிமன்ற புகழ் பேராசிரியர் முனைவர் கோடையிடி கோபாலகிருஷ்ணன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜெய்சங்கர் மற்றும் குடிக்காடு கிராம பொதுமக்கள், பெற்றோர்கள் மாணவ மாணவிகள் என நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம இளைஞர் நற்பணி மன்றத்தின் இளைஞர்கள் செய்திருந்தனர்..

