Skip to content

திருச்சியில் வடமாநில கள்ள நோட்டு கும்பல் கைது

நேற்று இரவு திருச்சி துவாக்குடி கருப்பு கோவில் அருகே செயல்படும் பெட்ரோல் பங்கில்
மகாராஷ்டிரா எண்கொண்ட காரில் வந்த இருவர் காருக்கு பெட்ரோல் போட்டுவிட்டு கள்ள நோட்டை கொடுத்துவிட்டு சென்றனர். இது குறித்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் துவாக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் மஞ்சத்திடல் செக்போஸ்ட்டில்
வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த காரை வழிமறித்து சோதனையிட்டனர்.
அதில் 40 பண்டல்களில் 200 ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 8.86 லட்சம் ரூபாயாகும். அவை அனைத்தும் கள்ள நோட்டு என தெரிய வந்தது. இதனை யடுத்து துவாக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டதில் காரில் வந்த இருவரும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் பாபு ராவ், நாராயணன் என்பது தெரிய வந்தது. இதன் பின்னர் இருவரும் சிபிசிஐடி கள்ளநோட்டு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

error: Content is protected !!