கஞ்சா விற்ற 2 ரவுடிகள் உட்பட 3 பேர் கைது
திருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் கஞ்சா,போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது தாராநல்லூர் பாலம் அருகே கஞ்சா விற்ற எடத்தெரு பிள்ளைமாநகர் பகுதியை சேர்ந்த ரவுடி ஜான் (26 )மற்றும் அதே பகுதியை சேர்ந்த ரவுடி ஜான் அக்பர் கிளின்டன் 25) மற்றும் வரகனேரி சந்தானபுரம் சின்ன ஓடத்தெரு பகுதியை சேர்ந்த இம்ரான் கான் (20,) ஆகிய மூன்று பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை காந்தி மார்க்கெட் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆட்டோ டிரைவர்களுக்குள் மோதல் – 4 பேர் கைது
திருச்சி ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் செல்வம் (55) ஆட்டோ டிரைவர். இவர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் தனது ஆட்டோவை நிறுத்தி ஓட்டி வருகிறார்..இந்நிலையில் அதே ஆட்டோ ஸ்டாண்டை சேர்ந்த சிலருடன் ஸ்டாண்ட் பிரச்சினை உள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ஸ்ரீரங்கம் வரத செட்டியார் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் செந்தில்நாதன் ( 41 ) என்பவர் செல்வத்திடம் சண்டையிட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து ஆட்டோ டிரைவர்களான செந்தில்நாதன், ஸ்ரீரங்கம் சங்கர் நகரை சேர்ந்த சூர்யா ( 27 ) திருவானைக்காவல் நெல்சன் சாலையை சேர்ந்த காதர் பாட்ஷா ( 38 ).ஸ்ரீரங்கம் ரங்க நகரை சேர்ந்த ஸ்ரீனிவாசன் (53) ஆகியோரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமினில் விடுவித்தனர்.
காதலித்த பெண்ணை கர்ப்பம் ஆக்கிய டைல்ஸ் கடை ஊழியர்
திருச்சி தாயனூர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் தனியார் ஏஜென்சி டைல்ஸ் கடையில் வேலை செய்கிறார். இவரும் 17 வயது பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வருகின்றனர். இந்நிலையில் பெண்ணுடன் பழகியதில்
அவர் 4 மாத கர்ப்பிணியானார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து தாயனூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி மீது போக்சோ வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறிவாளை காட்டி பணம் பறிக்க முயன்ற வாலிபர்கள்
திருச்சி உய்ய கொண்டான் திருமலை ரத்தினம் நகரை சேர்ந்தவர் ரெங்கராஜ் (37). இவர் அம்மையப்பன் நகரில் உள்ள ஒரு கடையின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது 2 மர்ம நபர்கள் டூவிலரில் அங்கு வந்தனர் . அவர்கள் ரெங்கராஜிடம் அரிவாளை காட்டி மிரட்டி பணத்தை பறிக்க முயன்றுள்ளனர். அவர் சத்தம் போடவே அவர்கள் அங்கிருந்து தப்பிக்க முயன்ற போது பொதுமக்கள் உதவியுடன் அவர்களை கையும் களவுமாக பிடித்து அரசு மருத்துவமனை போலீசில் ஒப்படைத்தனர்.இதுகுறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், புதுக்கோட்டையை சேர்ந்த மாரிமுத்து ( 23 ) , சிவா ( 19 )ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து டூவிலரை பறிமுதல் செய்தனர்.

