மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், பயங்கரவாத அமைப்புகள் மற்றும் ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடூனா மாகாணம் கஜூரா பகுதியில் உள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டிற்காக மக்கள் கூடியிருந்தனர்.
அப்போது அங்கு துப்பாக்கிகளுடன் புகுந்த மர்ம கும்பல், வழிபாட்டில் இருந்த 150 பேரைத் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள அந்நாட்டு போலீசார், கடத்தப்பட்டவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நைஜீரியாவில் பள்ளி குழந்தைகள் மற்றும் கிராம மக்களைப் பயங்கரவாதிகள் கடத்துவது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

