ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சிலுவூரைச் சேர்ந்த வெங்காய வியாபாரி சிவ நாகராஜு (45), அவரது மனைவி லட்சுமி மாதுரி (37) மற்றும் கள்ளக்காதலன் கோபி ஆகியோரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயவாடாவில் சினிமா டிக்கெட் கவுண்டரில் வேலை பார்த்தபோது கோபியுடன் ஏற்பட்ட கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரைத் தீர்த்துக்கட்ட லட்சுமி மாதுரி திட்டமிட்டுள்ளார்.
சம்பவத்தன்று இரவு, கணவருக்கு ஆசையாகப் பரிமாறிய பிரியாணியில் 20 தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துள்ளார். சிவ நாகராஜு மயங்கிய நிலையில், கள்ளக்காதலன் கோபியை வீட்டிற்கு வரவழைத்த லட்சுமி, தலையணையால் கணவரின் முகத்தை அமுக்கிக் கொலை செய்துள்ளார். கொலையைச் செய்துவிட்டு, இரவு முழுவதும் இருவரும் செல்போனில் ஆபாச வீடியோக்களைப் பார்த்து ரசித்துள்ளனர். அதிகாலையில் கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறவினர்களிடம் நாடகமாடியுள்ளார்.
இருப்பினும், இறுதிச் சடங்கின் போது நாகராஜுவின் காதில் ரத்தம் வழிந்ததாலும், மார்பு எலும்புகள் உடைந்திருந்ததாலும் சந்தேகமடைந்த தந்தை போலீசில் புகார் அளித்தார். பிரேதப் பரிசோதனையில் அவர் மூச்சுத்திணறி கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. போலீசார் லட்சுமி மாதுரியின் செல்போனை ஆய்வு செய்தபோது, கள்ளக்காதலனுடன் பேசியதும், விடிய விடிய ஆபாசப் படங்கள் பார்த்ததும் அம்பலமானது. போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் கொலையை ஒப்புக்கொண்ட லட்சுமி மாதுரி மற்றும் கோபி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

