முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலாக விளங்குவது கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயமாகும்.
இந்த ஆலயத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று தைப்பூச திருவிழா.
எதிர்வரும் பிப்ரவரி மாதம் முதல் தேதி தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது .
இதனை முன்னிட்டு இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது.
கொடியேற்றத்தை முன்னிட்டு வள்ளி தெய்வானை உடன் சுப்பிரமணியர் சிறப்பு மலர் அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்துருளினார்.
விழாவின் முக்கிய நிகழ்வாக எதிர்வரும் 31 ஆம் தேதி தேரோட்டமும்,தைப்பூச தினத்தன்று தீர்த்தவாரி நிகழ்வும்நடைபெற உள்ளது.
கொடியேற்ற நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தன

