தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சுவாமிமலை திருவலஞ்சுழி பைபாஸ் பாலம் அருகே கஞ்சா விற்ற கும்பகோணம் நால்ரோட்டைச் சேர்ந்த ஆடலரசன் (25) என்பவரை கடந்த டிசம்பர் மாதம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ஆடலரசன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் பரிந்துரை செய்தார். அதன்பேரில், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவின்படி, ஆடலரசன் தற்போது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

