Skip to content

ஊட்டியில் கஞ்சா விற்ற காவலர் கைது

நீலகிரி மாவட்டம் உதகையை சேர்ந்த குரூஸ் (26) என்ற இளைஞர் கடந்த 21ம் தேதி உதகையில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். விற்பனை செய்ய எங்கிருந்து கஞ்சா கொண்டு வரப்படுகிறது என போலீசார் குரூஸிடம் நடத்திய விசாரணையில் உதகை நகர போக்குவரத்து பிரிவில் காவலராக பணியாற்றி வரும் நசீர் அகமது(26) என்பவரிடம் வாங்கியதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தான் கஞ்சா விற்பது தொடர்பான விஷயம் காவல்துறையினருக்கு தெரிந்து விட்டதால் காவலர் நசீர் முகமது தலைமறைவானார். அவரை 3 தனிப்படைகள் அமைத்து கோவையில் வைத்து கைது செய்து போலீசார் உதகை அழைத்து வந்தனர். பின்னர் உதகை நகர காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்தனர்.

விசாரணையில் கேரள மாநிலம் அட்டப்பாடி அருகேயுள்ள கோட்டதொரை பகுதியை சேர்ந்த மோகனசுந்தரம் என்ற கஞ்சா வியாபாரியிடம் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து நீலகிரியில் விற்பனை செய்து வந்ததாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து உதகை நகர மத்திய காவல் நிலைய போலீசார் அட்டபாடி அருகே உள்ள கோட்டதொரைக்கு விரைந்தனர். அங்கு மோகனசுந்தரத்தை கைது செய்தனர். பின்னர் அவரது இருப்பிடத்தில் சோதனை மேற்கொண்டனர். இதில் 17 கிரோ கஞ்சா சிக்கியது. கஞ்சா வியாபாரியை உதகை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு 3 பேர் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர்.

error: Content is protected !!