தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, நாளை (திங்கட்கிழமை) மற்றும் வருகிற 28-ஆம் தேதி (புதன்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மாவட்டம் முழுவதும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லாத வான்வழி வாகனங்களைப் பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தஞ்சை மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) தியாகராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் எச்சரித்துள்ளார்.

