Skip to content

பொள்ளாச்சியில் பானை மீது பரதம் ஆடி மாணவிகள் உலக சாதனை

பானை மீது நின்ற படி 30 நிமிடங்கள் தொடர்ந்து பரதநாட்டியம் ஆடிய கோவை நாட்டிய கலாசேத்ராவை சேர்ந்த 51 மாணவ, மாணவிகள் குளோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர். பாரம்பரிய கலைகளில் முக்கிய பங்கு வகிக்கும் பரத கலை குறித்த விழிப்புணர்வு

ஏற்படுத்தும் விதமாக பொள்ளாச்சியில் பரதநாட்டிய உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகே உள்ள ஸ்ரீ சத்யேந்திர சித்தர் பீடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 30 நிமிடங்கள் ஒலித்த இறைவணக்க பாடல்கள், தேவாரம் மற்றும் செம்மொழி ஆகிய பாடல்களுக்கு எல்.கே.ஜி. துவங்கி பள்ளி கல்லூரி வரை பயிலும் மாணவ, மாணவிகள் 51 பேர் பானை மீது நின்று பரத நாட்டிய நடனம் ஆடினர். தொடர்ந்து அரை மணி நேரம் பானை மீது

நின்று பரதம் ஆடிய இந்நிகழ்வு குளோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.
இது குறித்து கோவை நாட்டிய கலாஷேத்ரா நிறுவனர் ஏலியா நிஷா செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த சாதனை முயற்சிக்காக மாணவர்கள் சுமார் ஆறு மாதகாலம் தொடர்ந்து பயிற்சி எடுத்தனர். தற்போது மாறி வரும் டிஜிட்டல் உலகில் பரத கலை கற்பதன் அவசியம் மற்றும் பரத

நாட்டியம் ஆடுவதால் ஏற்படும் உடல் மற்றும் மன ஆரோக்கியம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த சாதனையை மாணவர்கள் செய்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு உலக சாதனை பதக்கங்கள் வழங்கப்பட்டது.

error: Content is protected !!