நாட்டின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் மஜக சார்பில் தேசியக் கொடியேற்றுதல் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. சென்னை தலைமை அலுவலகத்தில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்பித்தார்.
திருச்சி மாவட்ட மஜக சார்பில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு உணவளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பாபு தலைமையில், மாநில இளைஞர் அணிச் செயலாளர் திருச்சி ஷரிப் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அனைவருக்கும் சூடான வெஜிடபிள் பிரியாணி மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.
தமிழகம் முழுவதிலும் மஜக சார்பில் ஆதரவற்றோர் இல்லங்களில் உணவிடுதல், மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்கள் வழங்குதல், மருத்துவ முகாம்கள் மற்றும் ரத்த தான முகாம்கள் எனப் பல்வேறு சமூக நலப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஜமீர் பாஷா மாவட்டத் துணைச் செயலாளர் யாசர் ஷெரிப், அப்துல் அஜீஸ், வர்த்தக அணி மாநகர செயலாளர் பகதூர் அலி, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சதாம், தகவல் தொழில்நுட்ப அணி மண்டல செயலாளர் சேட், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டச் செயலாளர் பஷாரத், பொருளாளர் நியாஸ், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் ஷேக் உசேன், ஆழ்வார்தோப்பு கிளைச் செயலாளர் அன்சாரி, ஹபிபுதின் ஷரிப் உள்ளிட்ட மஜக நிர்வாகிகள் பலர் திரளாகப் பங்கேற்றனர்.

