பாமக கட்சியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பமனு கொடுத்த நபர்களுடன் இன்று பனையூரில் அன்புமணி நேர்காணல்
நேர்காணலில் பங்கேற்க பனையூர் அலுவலகத்திற்கு அன்புமணி வந்தடைந்தார்
இந்த நேர்காணலில் பாமக தலைவர் அன்புமணி மற்றும் முக்கிய மாநில நிர்வாகிகளும் உடன் இருக்கின்றனர்
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அலுவலகத்தில் கடந்த மாதம் தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அனைத்து மாவட்டத்தில் உள்ளவர்கள் கொடுத்தனர்.
விருப்பமனு கொடுத்தவர்களை வருகின்ற 27,28,29, 30 ஆகிய நாட்களில் பனையூரில் உள்ள அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலுக்கு வரவேண்டும் என ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தேதியிலும் காலையில் ஐந்து மாவட்டங்களும் மாலையில் 5 மாவட்டங்களும் என தனித்தனியாக பிரித்து அவர்களுக்கு ஏத்த நேரம் ஒதுக்கி அந்த நேரத்தில் அந்தந்த மாவட்டத்தில் விருப்பமான கொடுத்தவர்களை வரவேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலைகளில் உள்ள பனையூரில் உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அலுவலகத்தில் அன்புமணி முன்னிலையில் நேர்காணல் இன்று 12 மணிக்கு மேலாக நடைபெறுகிறது.
இன்று காலையில் திருவள்ளூர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை,
நீலகிரி, திருச்சி, மற்றும் இன்று மாலை வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம்,
கள்ளக்குறிச்சி, இராமநாதபுரம். ஆகிய மாவட்டங்களில் இருந்து விருப்பமான கொடுத்த நபர்களுடன் அன்புமணி ராமதாஸ் நேர்காணலில் ஈடுபடுகிறார். இதற்காக அலுவலகத்திற்கு அன்புமணி வந்தடைந்துள்ளார் விருப்பமுனு அளித்தவர்களிடம் நேர்காணல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

