Skip to content

அரவக்குறிச்சியில் ஆதவ்-ஐ கண்டித்து விசிகவினர் ஆர்ப்பாட்டம்

திருமாவளவனை அவமதித்த விவகாரம் – அரவக்குறிச்சியில் ஆதவ் அர்ஜுனாவை கண்டித்து விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். நாவை அடக்காவிட்டால் நாவை துண்டாக்குவோம் என கோஷமிட்டனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களை அவமதிக்கும் வகையில் பேசிய தமிழக வெற்றிக் கழக மாநில நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவை கண்டித்து, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரவக்குறிச்சி புங்கம்பாடி கார்னர் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது திருமாவளவனை அவதூறாகப் பேசியதற்கு உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அரசியல் தலைவர்களை ஒருமையில் பேசுவதையும், தரக்குறைவான விமர்சனங்களையும் இனிமேல் தவிர்க்க வேண்டும். தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டால், தமிழ்நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடைபெறும்.நாவை அடக்காவிட்டால் நாவை துண்டாக்குவோம் என கோஷம் எழுப்பினர்.

error: Content is protected !!