Skip to content

பூந்தமல்லி அருகே ஓடும் காரில் திடீர் தீ விபத்து: பயணிகள் நூலிழையில் உயிர் தப்பினர்

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று மதியம் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த காரில் இரண்டுக்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில், கார் பூந்தமல்லி அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக முன்பகுதியில் இருந்து புகை வந்து தீப்பற்றத் தொடங்கியது. தீ மளமளவென பரவுவதைக் கண்ட காரில் இருந்த பயணிகள் அனைவரும், உடனடியாக காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கியதால் நூலிழையில் உயிர் தப்பினர். அவர்கள் வெளியேறிய சில நிமிடங்களிலேயே கார் முழுவதுமாகத் தீயில் சிக்கியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த விபத்தில் கார் கடுமையாகச் சேதமடைந்தது. இந்த விபத்து காரணமாகத் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, மின்கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!