ஆசிரியர் தகுதித் தேர்வு (TET), தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் விழுக்காடு 5% குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்குக் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 50% அல்லது 75 மதிப்பெண்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி/எஸ்டி (SC/ST) பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 40% அல்லது 60 மதிப்பெண்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாணை கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி தேர்வு எழுதியவர்களுக்கும், மேலும் ஆசிரியர்களாகத் தொடர்வதற்குத் தகுதித் தேர்வு எழுதவுள்ள ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.

