பொள்ளாச்சி அடுத்த தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது இந்த நிகழ்வில் பங்கேற்று தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்ட பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில்., திமுக மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ கோ தளபதி காங்கிரஸ் எம்பிக்களை பற்றி விமர்சனம் செய்ததற்கு எம்பி மாணிக்கம் தாகூர் மதுரை வடக்கு தொகுதியை கேட்டு பெறுவோம் என்று கூறியதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணிக்கு தளபதி ஸ்டாலின் அவர்கள் தான் தலைமை தாங்குகிறார். எங்கள் தலைமையிலான கூட்டணியில் எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை இதை ஊடகங்கள் தான் பெரிது படுத்துகிறது என்று கூறினார்.
திமுக கூட்டணியில் விரிசல் வர வாய்ப்பே இல்லை…பொள்ளாச்சி எம்பி

