Skip to content

கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசை கண்டித்து பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம். இதில் பங்கேற்ற கட்சியின் மாநில துணை தலைவர் கந்தசாமி கூறுகையில்., மீண்டும் நூறு நாள் வேலை திட்டத்தை கொண்டு வர வேண்டும் அதற்கு மகாத்மா காந்தியின் பெயரை சூட்ட வேண்டும்., ஏற்கனவே அறிவித்த GRG திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை 90சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். மத்திய அரசு 60சதவீதமும் மாநில அரசு 40 சதவீதம் பங்களிப்பு என்பது மாநில அரசான தமிழ்நாட்டிற்கு சுமார் 7000 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட கூடும் என்று குற்றம் சாட்டும் அவர் தமிழக அரசு அல்ல எந்த மாநில அரசும் இந்த நிதியை வழங்க ஒப்புக்கொள்ளாது எனவே இந்த திட்டம் கண்டிப்பாக ஒரு பெய்லியர் திட்டமாக தான் அமையும் இந்த திட்டம் ரத்தாகும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

error: Content is protected !!