நல்ல முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டுள்ளது கூட்டணிக்கான நிறைவான முடிவு எடுக்கப்படும். ஸ்பெகுலேஷன் (Speculation), வதந்திகள் எல்லாவற்றிற்கும் கனிமொழி எம்பி ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்
தேர்தலைப் பற்றி, எண்ணிக்கைகள், உடன்பாடுகள் அனைத்தும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி முடிவெடுப்பார்கள் என்று தஞ்சையில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி.
தஞ்சையில் அரசு ராசா மிராசுதாரர் மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவரும் காங்கிரஸ் மாநில தலைவருமான செல்வப் பெருந்தகை ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவர்கள் நோயாளிகளிடம் கேட்டறிந்தார். பின்பு புதிய தலைமுறை கழித்த பேட்டியில் ராகுல் காந்தி கனிமொழி சந்திப்பு குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில் நல்ல முறையில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கூட்டணிக்கான நிறைவான முடிவு எடுக்கப்படும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.
இந்த ஸ்பெகுலேஷன் (Speculation), வதந்திகள் எல்லாவற்றிற்கும் கனிமொழி எம்பி அவர்கள் ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இது ஒரு இயற்கையான கூட்டணி என்பதை மீண்டும் மீண்டும் அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள்
ஆகவே, எல்லா தரவுகளும் வந்த பிறகு, பேச்சுவார்த்தை முடிந்த பிறகு விவரமாக நாங்கள் பத்திரிகையாளர்களிடம் சொல்வோம். இந்த தேர்தல் முடிவு அகில இந்திய தலைமை தான் முடிவெடுக்கும். அந்த அடிப்படையில் தேர்தலைப் பற்றி, எண்ணிக்கைகள், உடன்பாடுகள் அனைத்தும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி முடிவெடுப்பார்கள்.
கட்சி குறித்து நான் சொல்ல வேண்டும் அகில இந்திய தலைமை சொல்ல வேண்டும் மீதி பேர் சொல்றதெல்லாம் கருத்துக்கள் தன்னிடம் கட்சி தலைமையிடம் வந்து சொல்லலாம். பொதுவெளியில் சொல்வதைத் தவிர்க்க வேண்டும் என அகில இந்திய தலைமையும் சொல்லியிருக்கிறது. பொதுவெளியில் கூட்டணியைப் பற்றி பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள் .

