தென் அமெரிக்க நாடான ஈகுவேடாரின் எஸ்மெரால்டஸ் நகரில் உள்ள நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தேசிய எண்ணெய் நிறுவனமான ‘பெட்ரோ ஈகுவேடாருக்கு’ சொந்தமான இந்த நிலையத்தில், தீ பரவியதும் சுத்திகரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டு ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 8 மாதங்களில் இதே நிலையத்தில் நடைபெறும் இரண்டாவது தீ விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

