பாட்டாளி மக்கள் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட அலுவலகத்தில் இன்று மாவட்ட இளைஞரணி பொதுக்குழு கூட்டம் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் புகலூர் க.சுரேஷ் தலைமையில் நடைபெற்றது .
பாமக மாவட்ட இளைஞரணி செயலாளர் மலைமுத்து வரவேற்புரை நிகழ்த்தினார்.
பாமக மாநில துணைத்தலைவர் மணிமாவட்ட வன்னியர் சங்க செயலாளர் இ.வை. பசுபதி மாவட்ட அமைப்புச் செயலாளர் பு.ஆ.குணசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாமக கரூர் மாநகர செயலாளர் ராக்கி முருகேசன் நன்றி உரை கூறினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி மாநில செயலாளர் ச.வடிவேலன் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாமக மாநில இளைஞரணி செயலாளர் சு.வடிவேலன், பாட்டாளி மக்கள் கட்சி 2026 தேர்தலில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற பாமக தொண்டர்கள் தீவிரமாக பணியாற்றுவார்கள். பிப்ரவரி 10ஆம் தேதி சென்னையில் நடைபெறும் இளைஞர் அணி கூட்டம் பாமகவுக்கு திருப்புமுனையாக அமையும் கரூர் மாவட்டத்திலிருந்து 2000 பாமக தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள் என்றார்.
கூட்டத்தில், பாமக மாநில செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன், மாவட்ட துணை செயலாளர்கள் வாங்கல் சதீஸ், மார்கெட் வரதன், மாவட்ட இளைஞர் சங்கத் தலைவர் குரேரேசன், கரூர் மாவட்ட மாணவர் சங்க செயலாளர் வினோத், கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகராஜ், ஒன்றிய தலைவர் சண்முகம், மாநில பொதுக்குழு உறுப்பினர் அறிவழகன், மாவட்டத் துணைத் தலைவர் அரங்கம் சதீஷ்குமார், இளைஞரணி சார்ந்த கோகுல், மெய்வேந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

