Skip to content

திருச்சியில் 3 நாட்கள் நடைபெறும் தேசிய மினி ரோல் பால் போட்டி..

15வது மினி தேசிய ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்கி 23-ந்தேதி வரை 3 நாட்கள் திருச்சி கே.கே. நகரில் உள்ள சாய் ஜி ரோல் பால் அகடாமியில்
நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா உள்பட 20 மாநிலங்களை சேர்ந்த 11 வயதிற்குட்பட்ட ஆண்கள், பெண்கள் அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றது. போட்டிகள் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெற உள்ளது.
தொடக்க விழாவில் சேர்மன் கே.டி.சிவசண்முகம் கலந்துகொண்டு போட்டியை துவக்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு ரோல் பால் நிறுவனர் ராஜுதபாதே, தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் எம்.பி.சுப்ரமணியம்,
தமிழ்நாடு ரோல் பால் சங்க பொதுச்செயலாளர் கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!