திண்டுக்கல்: வத்தலகுண்டு பகுதியில் லாரி ஒர்க் ஷாப் உரிமையாளர் ரமேஷ்கண்ணன் அடித்துக் கொலை செய்யப்பட்டார். பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் ரமேஷ்கண்ணனை கடத்திச் சென்று அடித்துக் கொன்றுள்ளனர். ரமேஷ்கண்ணனை கொலை செய்த வழக்கில் பிரவீன், ஹரிஹரனை காவல்துறை கைது செய்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

