Skip to content

கரூர் அருகே தீயில் கருகிய 15 மீன் கடைகள் .. சோகம்

கரூர் அருகே மாயனூர் காவிரி கதவணை பகுதியில் கீற்று கொட்டகையால் அமைக்கப்பட்டிருந்த 15 மேற்பட்ட மீன் கடைகள் தீயில் கருகியது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் காவிரி கதவணையில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

அவர்கள் கதவணைக்கு அருகே பாசன வாய்க்கால் கரையில் 50க்கு மேற்பட்ட கீற்று கொட்டகையால் மீன் கடைகள் அமைத்து தினம் தோறும் காவிரி ஆற்றில் உயிருடன் மீன்களை பிடித்து

விற்பனையில் மீன் பிடி தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு கரூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும், பல வெளி மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்து மீன்கள் வாங்கி செல்வது வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இரவு திடீரென மீன் கடைகள் தீப்பற்றி எரிந்ததை அப்

பகுதி வழியாக சென்ற பொது மக்கள் கண்டு மீனவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த மீனவர்கள் தீப்பற்றி எரிந்த கடைகளை தண்ணீர் ஊற்றி அனைத்தனர்.

அதற்குள் 15 க்கும் மேற்பட்ட கடைகள் முற்றிலும் தீயில் எரிந்தது. மேலும் மீன்கள் கழுவுவதற்கு பயன்படுத்தும் பொருள்கள் அனைத்தும் தீயில் கருவியது எனக் கூறப்படுகிறது. தகவல் அறிந்த மாயனூர் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!