கரூரில் கொரியர் அலுவலகத்தில் பேட்டரி பார்சல் திடீரென தீப்பற்றியது, ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது: பகுதியில்சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
கரூர், திருக்காம்புலியூர் ரவுண்டானா பகுதியில் இருந்து திண்டுக்கல் செல்லும் சர்வீஸ் சாலையில் செயல்பட்டு வரும் ப்ரொபஷனல் கொரியர் அலுவலகத்தில் பேட்டரி பார்சல் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்ட பார்சல்களை ஊழியர்கள்

பிரித்து வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது பேட்டரி இருந்த பார்சல் ஒன்றில் இருந்து திடீரென அதிக அளவில் புகை வெளியேறியது.
இதனை கவனித்த ஊழியர்கள் உடனடியாக அந்த பார்சல் பெட்டியை

அலுவலகத்திலிருந்து வெளியே எடுத்துச் சென்றனர். சிறிது நேரத்தில் அந்த பெட்டி தீப்பற்றி எரியத் தொடங்கியது. உடனே தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு புகை வந்ததும் பார்சலை வெளியே எடுத்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

