கரூர் வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் பாலகிருஷ்ணன் இவர் தனது குடும்பச் சூழ்நிலை காரணமாக, தனது மனைவியின் 6 பவுன் தங்கச் சங்கிலியை விற்பனை செய்ய முடிவு செய்தார். அதற்காக வடிவேல் நகரில் உள்ள தனியார் அடகு கடைக்குச் சங்கிலியைத் தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு சென்றுள்ளார்.
துரதிர்ஷ்டவசமாக, அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்த ஓட்டை வழியாகத் தங்கச் சங்கிலி சாலையில் தவறி விழுந்துள்ளது. கடைக்குச் சென்ற பிறகு சங்கிலி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த முதியவர், உடனடியாக 100 என்ற அவசர எண்ணிற்குத் தகவல் அளித்தார்.
தகவல் கிடைத்தவுடன் கரூர் நகர காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சங்கிலி காணாமல் போன பாதையில் இருந்த 10-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது, சாலையில் விழுந்த சங்கிலியை முதியவர் எடுத்துச் சென்றது கேமராவில் பதிவாகியிருந்தது.
அந்த நபரைக் அடையாளம் கண்ட போலீசார், அவரிடமிருந்து 6 பவுன் தங்கச் சங்கிலியைப் சம்பவம் நடந்த இரண்டரை (2 1/2) மணி நேரத்திற்குள்ளாகவே, பாதிக்கப்பட்ட பாலகிருஷ்ணனை காவல் நிலையத்திற்கு வரவழைத்து, காவல் உதவி ஆய்வாளர் நாகராஜ் தங்கச் சங்கிலியை அவரிடம் ஒப்படைத்தார்.

