விருத்தாசலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த நபரின் போன் திடீரென சூடாகி வெடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த நபர் ஒருவர் அவரது Vivo y 60 செல்போனை பயன்படுத்திவிட்டு சட்டை பாக்கெட்டில் வைத்துள்ளார். அப்பொழுது திடீரென அந்த போன் சூடாவதைக் கண்டறிந்த அந்த நபர் போனை தூக்கி எறிந்ததும் அந்த போன் திடீரென வெடித்து முழுவதுமாக எரிந்து சேதம் அடைந்தது. சற்று சுதாரித்து போனை தூக்கி எரிந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். திடீரென வெடித்து சிதறி தெரித்த போனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

