முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலில் இந்தித் திணிப்புக்கு எதிராக என்றும் போராடுவோம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ““தமிழ் வாழ்க. இந்தித் திணிப்பு ஒழிக” என முழக்கமிட்ட தியாகி கீழப்பளுவூர் சின்னசாமி மொழிக்காக தன் இன்னுயிரை இழந்த இடம் திருச்சி ரயில் நிலையம். மொழிப்போர்த் தியாகிகளின் தியாகத்திற்கும் தமிழர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்காமல், அதே திருச்சியின் மண்டல இரயில்வே அலுவலகத்தின் முகப்பில் இந்தி திணிக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். மொழித் திணிப்பிற்கு எதிரான தியாகியின் தீ எங்கள் மனதில் கனன்று கொண்டுதான் இருக்கிறது என்பதை ஒன்றிய அரசுக்கு உரக்கச் சொல்கிறோம்.”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் வழிகாட்டுதலில் இந்தித் திணிப்புக்கு எதிராக என்றும் போராடுவோம்- அமைச்சர் மகேஸ்

