Skip to content

ஆதவ் அர்ஜூனாவின் கருத்து உண்மையில்லை.. காலம் பேசாது… ரஜினி

சென்னையில் சில நாட்களுக்கு முன் நடந்த த.வெ.க., ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜூனா, ‘ரஜினி அரசியலுக்கு வந்த சமயத்தில் அவரை மிரட்டி தி.மு.க., வரவிடாமல் செய்துவிட்டது. இன்று ரெட்ஜெயண்ட் (துணை முதல்வர் உதயநிதி சினிமா நிறுவனம்) தயாரிப்பில் ரஜினி நடிக்க சென்றுவிட்டார்’ என கிண்டலடித்தார். இதற்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆதவ் அர்ஜூனா அண்மையில் தெரிவித்த கருத்துக்குப் பதிலளிக்கும் வகையிலும், நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள், சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.

அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய எடப்பாடி திரு.பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் திரு.நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் திரு.எல்.முருகன், தமிழக அமைச்சர் திரு.ரகுபதி, திரு.தொல்.திருமாவளவன், திரு.எஸ்.பி.வேலுமணி, நண்பர் திரு அண்ணாமலை, திரு.அர்ஜுனமூர்த்தி, திரு.அன்புமணி ராமதாஸ், திரு.ஜி.கே. வாசன், திரு ஜான் பாண்டியன், திரு.புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், திரு.அமீர், திரு.ஜி.தனஞ்சயன் மற்றும் திரையுலக நண்பர்கள், மற்றும் திரு.நக்கீரன் கோபால், சாணக்கியா திரு.ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத்துறையினர்.என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்”

error: Content is protected !!