+1 மாணவியை கர்ப்பமாகிய சிறுவன்
திருச்சி கிராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவருடைய தாய் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது தந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜன. 12 ந் தேதி தாய்க்கு உதவுவதற்காக அவரது வீட்டில் இவரது உறவினரான 17 வயது சிறுவன் தங்கி உள்ளார். இதனால் சிறுமியிடம் பேசும் பழக்கம் சிறுவனுக்கு ஏற்பட்டது. இதனால் சிறுமியை காதலித்து பழகியதாக கூறப்படுகிறது. இதில் சிறுமி
3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இது குறித்த வழக்கு குழந்தைகள் நலக் குழுவின் விசாரணைக்குப் பிறகு பதிவு செய்யப்பட்டு கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புகையிலை விற்றவர் கைது
திருச்சி கோரையாறு பகுதியில் புகையிலை விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் எடமலைப்பட்டி புதூரில் நேற்று போலீசார் சோதனை மேற்கொண்டனர்.அப்போது கோரையாறு பாலம் அருகே புகையிலை விற்ற மணப்பாறை எம்ஜிஆர் நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் ( வயது25 ) என்பவரை செசன்ஸ் கோர்ட் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 60 கிராம் புகையிலை பறிமுதல் செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.
கஞ்சா விற்ற இரண்டு பேர் கைது
திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக வந்த தகவலின் பேரில் நேற்று போலீசார் சோதனை மேற்கொண்டனர் அப்போது மில்க் காலனி மாரியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்றுக் கொண்டிருந்த ராம்ஜி நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கீர்த்திவாசன் 22) என்பவரை எடமலைப்பட்டி புதூர் போலீசார் கைது செய்தனர். இதே போன்று உறையூர் குறத்தெரு பகுதியில் கஞ்சா விற்ற தில்லைநகர் காந்திபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (26) என்பவரை உறையூர் போலீசார் கைது செய்தனர்.மேலும் இவர்களிடம் இருந்த 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

