Skip to content

அரியலூர்-தேர்தல் மொபைல் செயலி பயிற்சி- கலெக்டர் தலைமையில் அலுவலர்கள் பங்கேற்பு

இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட, வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான
காணொளிக் காட்சி மொபைல் செயலி பயிற்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கலந்துகொண்டார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026, இந்திய தேர்தல் ஆணையத்தால் காணொளிக்காட்சி வாயிலாக நடத்தப்பட்ட வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான மொபைல் செயலி பயிற்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கலந்துகொண்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கான மொபைல் செயலி பயிற்சி வகுப்பில் செயலியின் பயன்பாடுகள் குறித்து விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், இச்செயலியின் அனைத்து செயல்முறைகள் குறித்தும் படிப்படியாக பயிற்சி அளிக்கப்பட்டது. வாக்குச்சாவடிக்கு புறப்படுவது முதல், வாக்குப்பதிவு நிறைவடையும் வரை மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து எளிதில் புரியும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

இக்காணொளிக் காட்சி பயிற்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக அலுவலர் (தேர்தல்) சித்ரா, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பிரேமி, தனி வட்டாட்சியர் (தேர்தல்) கண்ணன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், ஒருங்கிணைப்பு அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள், மண்டல அலுவலர்கள் மற்றும் கணினி நிரலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!