Skip to content

கரூர் திமுக சார்பில் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம்…

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனியா திருமண மண்டபத்தில் திமுக சார்பில் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட திமுக செயலாளர் மேற்கு மண்டல திமுக பொறுப்பாளர் மாணவர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, திமுக முக்கிய பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் என 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்களை சந்தித்து செந்தில் பாலாஜி கூறுகையில்:

கரூரில் அனுமதியின்றி தேர்தல் பணிமனைகள் (மனித பட்டிகள்) அமைக்கப்பட்டதாகவும், அரசு அதிகாரிகள் திமுகவுக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக செயல்படுவதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தனர்.

அதிகாரிகள் நடுநிலையுடன் செயல்பட்ட காரணத்தால்தான் புகார் வந்தவுடன் விமர்சனத்திற்குரிய இடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர் எனவும், செந்தில் பாலாஜி பேட்டி.

திமுக சார்பில் 9 இடங்களில் மட்டுமே பணிமனை அமைக்கப்பட்டு உள்ளது. தோல்வி பயத்தில் அதிமுகவினர் புகார் கூறுகின்றர்.

error: Content is protected !!