Skip to content

ஏப்ரல் 1 முதல் வங்கிகள் மற்றும் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான புதிய கட்டணங்கள் அமல்

நாடு முழுவதும் வங்கிகள், ஏ.டி.எம். பரிவர்த்தனைகளுக்கான புதிய கட்டணங்கள், விதிகள் ஏப்.1 முதல் அமலாகின்றன. எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.களில் ரூ.10,000க்கு மேல் பணம் எடுத்தால் ஏப்.1 முதல் ஒடிபி உள்ளீடு கட்டாயம். கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏ.டி.எம்.களில் 5 முறை இலவச பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். பிற வங்கி ஏடி.எம்.களில் மெட்ரோ அல்லாத நகரங்களில் 5 முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம். கணக்கு இல்லாத வங்கி ஏ.டி.எம்.களில் மெட்ரோ நகரங்களில் முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம். இலவச பரிவர்த்தனை முடிந்துவிட்டால் ஏ.டி.எம். மற்றும் யு.பி.ஐ. பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படும்

error: Content is protected !!