Skip to content

5வது திருமணத்திற்கு தயாராகும்…….92 வயது தொழிலதிபர்

  • by Authour

உலகப் புகழ்பெற்ற ஆஸ்திரேலிய தொழிலதிபர் ரூபர்ட் முர்டோக். இவர் தனது 92 வயதில் ஐந்தாவது முறையாக திருமணம் செய்துகொள்ள தயாராகி வந்தார். 66 வயதான ஆன் லெஸ்லி ஸ்மித் என்பவரை திருமணம் செய்து கொள்ல இருந்தார். லெஸ்லி ஏற்கெனவே திருமணமாகி கணவரை இழந்தவர். மறைந்த இவரது கணவர் செஸ்டர் ஸ்மித், நாட்டுப்புற பாடகராகவும் மற்றும் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகியாகவும் இருந்தவர்.

முர்டோக், லெஸ்ஸி இருவரும் வருகிற கோடை காலத்தில் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்து இருந்தனர். நாங்கள் இருவரும் எங்கள் வாழ்க்கையின் இரண்டாம் பாதியை ஒன்றாகக் கழிக்க எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறோம் என தெரிவித்து இருந்தனர்.  தற்போது லெஸ்லி ஸ்மித் மற்றும் முர்டோம் தங்கள் நிச்சயதார்த்தத்தை ரத்து செய்துள்ளனர். மத பிரச்சினை காரணமாக இவர்கள் திருமணம் நின்றுபோனதாக கூறப்படுகிறது.முர்டாக் மீண்டும் புதிய காதலியை தேடுவாரா அல்லது அவர் தனது வணிகத்திலும் குடும்பத்தின் வாரிசுகளிலும் கவனம் செலுத்துவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்போதைக்கு தொழிலதிபர் திருமணமே இல்லாமல் கோடைக் காலத்தைக் கழிப்பார் என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!