பேராசிரியர் அன்பழகனின் 100 வது பிறந்த நாளை முன்னிட்டு பாபநாசம் அடுத்த கபிஸ்தலத்தில் அன்பழகனின் படத்திற்கு திமுக சார்பில் மாலையணிவித்து மரியாதைச் செலுத்தப் பட்டது. இதில் வடக்கு ஒன்றியச் செயலர் தாமரைச் செல்வன், பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி சுமதி, லண்டன் குணா, ஒன்றியக் கவுன்சிலர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். இதேப் போன்று பாபநாசத்தில் நடந்த நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றியச் செயலர் நாசர், பேரூர் செயலர் கபிலன், மீனவரணி புகழேந்தி, முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் அறிவழகன், இளைஞரணி மணி கண்டன், நவநீத கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். இதேப் போன்று அய்யம் பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில் பேரூர் செயலர் துளசி அய்யா, பேரூராட்சி துணைத் தலைவர் அழகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
