கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த இஞ்சி பாறை எல்டி பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளியாக பணிபுரிந்து வரும் ஐயப்பன் வயது 58 இவர் அப்பகுதியில் உள்ள 4 ம் நெம்பர் காட்டில் ஸ்பிரே மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அப்பகுதியில் ஒளிந்திருந்த கரடி அவரை இடது காலை கடித்துக் குதறியது இதனால் பயங்கர காயம் ஏற்பட்டு அலறல் சத்தமிட்டுள்ளார். இதனை அறிந்த சக தொழிலாளர்கள் அவரை கரடியிடமிருந்து காப்பாற்றி உடனடியாக வனத்துறைக்கு தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 வாகனம் மூலமாக ஸ்டாண்மோர் பொது மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு அதன் பின்னர் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு கடித்துக் குதறிய பகுதிகளில் தையலிட்டு முதலுதவி அளிக்கப்பட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் உறவினர்கள் வால்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள வனத்துறையினரை முற்றுகையிட்டனர். இதனால் பொதுமக்களுக்கும் வனத்துறைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது தற்போது இஞ்சிப்பாறை பகுதியில் கரடி சுமார் கடந்த இரண்டு மாதங்களில் ஐந்து பேரை தாக்கி உள்ளதால் அப்பகுதியில் கடந்த நான்கு மாதத்திற்கு முன்பாக கூண்டு வைத்து கரடியை பிடிக்க வனத்துறையினர் முயற்சி செய்து பலன் அளிக்காமல் கூண்டை திருப்பிக் கொண்டு வந்துள்ளனர். இதனால் பகுதியில் கரடிகள் அடிக்கடி இது போன்ற தாக்குதலில் ஈடுபடுகிறது. எனவே வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர், இந்த சம்பவத்தை அடுத்து பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஐயப்பனை தி.மு.க. கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தளபதி முருகேஷ் நேரில் சென்று விசாரித்து நிதி உதவி அளித்தார், உடன் நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
